உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வடமாநில வாலிபர்கள் இருவர் கொலை

வடமாநில வாலிபர்கள் இருவர் கொலை

பள்ளிப்பாளையம்,:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் முன்னா, 28, துபலேஷ், 27; நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வந்தனர். இவர்கள், நுாற்பாலை அருகே வாடகைக்கு அறை எடுத்து வசித்தனர். இவர்களுடன், வடமாநிலத்தை சேர்ந்த மேலும் நான்கு பேர் தங்கியிருந்தனர்.நேற்று காலை வெப்படை அடுத்த பாதரையில், சாலையோர முட்புதரில் முன்னா, துபலேஷ் தலையில், கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இருவரின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க, ஆறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கொலை செய்யப்பட்ட இருவரில், முன்னாவிடம் மட்டுமே மொபைல் போன் உள்ளது. அதை வைத்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை