டூவீலர் அசல் ஆவணங்களை தராத விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
நாமக்கல்: 'வாகனத்தின் அசல் ஆவணங்களை தராத விற்பனையாளர், வாடிக்கையாளருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்த-ரவிட்டது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன் மனைவி மாதேஸ்வரி, 53; இவர், டூவீலர் வாங்க, 2021 மார்ச்சில், ஈரோட்டில் உள்ள, 'லோட்டஸ் ஏஜென்சி' ஷோரூமை அணுகி-யுள்ளார். அங்கு, 63,509 ரூபாய் மதிப்புள்ள, 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப் பிளஸ்' வாகனத்தை தேர்வு செய்து, 10,000 ரூபாய் முன்பணம் செலுத்தினார். மீதமுள்ள பணத்தை, ஈரோட்டில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியில் தவணை மூலம் செலுத்த கடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்த பின், அசல் ஆவணங்-களை மாதேஸ்வரி கேட்டுள்ளார். அப்போது, 'கடனுக்காக அசல் பதிவு சான்றிதழை வங்கியில் கொடுத்து விடுவோம்' என, வாகன விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, அசல், வட்டியை முழுவதும் செலுத்திய பின், வங்-கிக்கு சென்று அசல் ஆவணங்களை கேட்டபோது, 'தங்களிடம் அசல் ஆவணங்கள் இல்லை' என, வங்கி நிர்வாகம் தெரிவித்தது. வாகன விற்பனையாளரை அணுகி கேட்டபோது, தாங்கள் வங்-கியில் கொடுத்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மாதேஸ்வரி, 2024 மே மாதம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், வங்கி மற்றும் வாகன விற்பனையாளர் மீது வழக்கு தொடுத்தார்.விசாரணை நடத்திய நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி-பதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர். அதில், வாகனத்தின் அசல் ஆவணங்-களை யாரிடம் வழங்கப்பட்டது என்பதற்கான அறிக்கையை, ஆர்.டி.ஓ., சமர்ப்பித்துள்ளார். அதில், அசல் ஆவணங்களை பெற்-றுக்கொண்டதாக வாகன விற்பனையாளரின் தரப்பில் கையொப்பம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அசல் பதிவு சான்றிதழை வைத்துக்கொண்டு தர மறுக்கும் விற்பனையாளரின் செயல், நேர்மையற்ற வர்த்தக நடைமுறையை நிரூபணம் செய்கி-றது. அதனால், நான்கு வாரத்துக்குள் அசல் ஆவணங்களை, வழக்கு தாக்கல் செய்துள்ள மாதேஸ்வரிக்கு, வாகன விற்பனை-யாளர் வழங்க வேண்டும். மேலும், மாதேஸ்வரிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சிரமங்களுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.