ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் பஞ்சா-யத்தில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதில் பேசிய பொதுமக்களில் ஒருவர், 'சவுதாபுரத்தில் செயல்-படும் தனியார் நூற்பாலை நிர்வாகத்தினர், இப்பகுதியில் செல்லும் ஓடையை ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு கிராம சபை கூட்டத்தில் மனு கொடுத்தேன். முதல்வர் தனிபிரிவுக்கும் மனு கொடுத்தேன். இதையடுத்து குறிப்பிட்ட பகுதி மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்ற-வில்லை,' என்றார்.இது குறித்து பள்ளிப்பாளையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புலட்சுமி கூறுகையில், ''ஏற்கனவே சர்வே செய்து ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.இன்னும் ஆக்கிரமிப்பு உள்ளது. முழுமையாக அகற்ற வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் வேலுமணி என்பவர் தெரிவித்தார். ஓடை ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்துறையினர்தான் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.