வரதராஜூலு நாயுடுவின் 138வது பிறந்த நாள் விழா
நாமக்கல், சுதந்திர போராட்ட தியாகி வரதராஜூலு நாயுடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். சிறந்த தொழிற்சங்கவாதி, சிறந்த பத்திரிகையாளர், தமிழகத்தில் தமிழ், ஆங்கில பத்திரிகையை துவங்கி, பொதுமக்களிடம் சுதந்திர போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிகையாளர். சென்னை மாகாண சட்ட பேரவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். சென்னை மாகாண காங்., தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.இவரது, 138வது பிறந்த நாள் விழா, அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில், விடுதலைக்களம் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. நிறுவன தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட நாயுடுகள் சங்க தலைவர் வேங்கடசுப்ரமணியன், ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா, நகர தி.மு.க., செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, வரதராஜூலு நாயுடு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட காங்., தலைவர் சித்திக், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.