உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரிங் ரோட்டில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் குட்டையில் பாயும் அபாயம்

ரிங் ரோட்டில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் குட்டையில் பாயும் அபாயம்

நாமக்கல், நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரிங் ரோட்டில் தடுப்பு சுவர் இல்லாததால், வாகனங்கள் குட்டையில் பாயும் அபாயம் உள்ளது.நாமக்கல்லில் தற்போது ரிங் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், சேந்தமங்கலம் சாலை, வேட்டாம்பாடியில் இருந்து துறையூர் சாலை, கூலிப்பட்டி வரையிலும், கூலிப்பட்டியில் இருந்து திருச்சி சாலை, வசந்தபுரம் வரையிலும், இரண்டு சாலைப்பணிகள் நிறைவடைந்துள்ளன.கூலிப்பட்டியில் இருந்து திருச்சி சாலையில் இணைக்கும் வகையிலான ரிங் ரோட்டில், வேப்பனம்புதுார் அருகே அய்யன்குட்டை அமைந்துள்ளது. அதன் அருகே அமைந்துள்ள மற்றொரு குட்டையை ஒட்டி ரிங் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விபத்தை தடுப்பதற்காக சிறிய அளிவில் கான்கிரீட் கல்லும், அலுமினிய தகடும் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் மோதினால் தடுப்புகளை உடைத்துக்கொண்டு குட்டைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, குட்டை பகுதியில், நான்கு அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை