மேலும் செய்திகள்
வேல் வழிபாட்டு நிகழ்ச்சி இந்து முன்னணி அழைப்பு
01-Dec-2024
காங்கேயம், டிச. 4-காங்கேயம் மற்றும் தாராபுரத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வேலுக்கு, நுாற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.இந்து முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடக்கிறது. இதற்கான வேல், கொங்கு மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு, வாகனத்தில் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் காங்கேயத்துக்கு நேற்று காலை ஊர்வலமாக சென்ற வேலுக்கு, பிரசித்தி பெற்ற பேட்டை மாரியம்மன் கோவிலில், இந்து முன்னணி இயக்க மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், வேல் வழிபாடு நடந்தது.இதில் ஏராளமான பெண்கள், வேலுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு, தீபாராதணை காட்டி வழிபட்டனர். இதேபோல் தாராபுரம் வந்த வேல் ரதத்துக்கு, திரளான பெண்கள் வரவேற்பு அளித்தனர். இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் கதிரேசன் முன்னிலையில் நடந்த நிகழ்வில், இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், வேல் வழிபாடு குறித்து விளக்கமாக பேசினார். இதேபோல் தென்தாரையில் நடந்த வேல் வழிபாட்டில், பா.ஜ., மாவட்ட நிர்வாகி ராஜா கோவிந்தசாமி, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி சங்கிலித்துரை உள்பட, 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
01-Dec-2024