உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபாளையம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

ராசிபாளையம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

ராசிபாளையம் கிராமத்தில்கால்நடை மருத்துவ முகாம்மோகனுார், நவ. 12-மோகனுார் தாலுகா, ராசிபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மாரியப்பன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமையில், கால்நடை உதவி மருத்துவர் காளிமுத்து, ஆய்வாளர்கள் பரமேஸ்வரி, புனிதா ஆகியோர் அடங்கிய குழுவினர், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில், குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. மேலும், தீவன மேலாண், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை