மேலும் செய்திகள்
அரிஸ்டோ பள்ளியில் மழலையர் சேர்க்கை
03-Oct-2025
ப.வேலுார், -பாண்டமங்கலம் ஆர்.என்., ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மற்றும் ஆர்.என்., ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளியில், ஆண்டுதோறும் விஜயதசமி அன்று மழலையர் வகுப்பு சேர்க்கை நடைபெறும். அதன்படி, இந்தாண்டு விஜயதசமியையொட்டி, மழலையர் வகுப்பிற்கான சேர்க்கை நடந்தது. விஜயதசமி அட்மிஷனை முன்னிட்டு, பெற்றோர் உற்சாகத்துடன் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்த்தனர். நெல் குவியலில் தமிழில் முதல் எழுத்தான, 'அ' என்ற எழுத்தை எழுத வைத்தனர் மற்றும் பள்ளியில் குழந்தைகளின் கைரேகை பதித்தனர். ஆர்.என்., ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவன தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சேகர், சம்பூரணம், ஆர்.என்., ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
03-Oct-2025