உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தனியார் ஆம்புலன்ஸ்டிரைவர்களுக்கு எச்சரிக்கை

தனியார் ஆம்புலன்ஸ்டிரைவர்களுக்கு எச்சரிக்கை

ப.வேலுார், டிச. 15--தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள்படி, தற்போது தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, ப.வேலுார் அரசு மருத்துவமனை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை மோட்டார் வாகன விதிமுறைப்படி செயல்படுகிறதா என, பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன், ப.வேலுார் டிராபிக் எஸ்.ஐ., அர்ஜுன்குமார் தலைமையில் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன.அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக ப.வேலுார் அரசு மருத்துவமனை முன் தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, மேற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார்.மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களை வேறு பகுதியில் நிறுத்திக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை