குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. இதில், 35,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது, காவிரி கூட்டு குடிநீர் புதிய திட்டத்தின் கீழ் பைப்புகள் புதிதாக அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. வெள்ளோட்டமாக டவுன் பஞ்.,ன் பல வாார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுவதால் எந்நேரமும் ஏதாவது ஒரு பகுதியில் பிரதான பைப்பில் குடிநீர் சென்று கொண்டே உள்ளது. இந்நிலையில், நேற்று ஆத்துார் பிரதான சாலையில் சுடுகாடு எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.