உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கனமழையில் நிரம்பிய தடுப்பணையில் ஓட்டை போட்டதால் வீணாகிய தண்ணீர்

கனமழையில் நிரம்பிய தடுப்பணையில் ஓட்டை போட்டதால் வீணாகிய தண்ணீர்

கெலமங்கலம் :கெலமங்கலம் அருகே, கனமழைக்கு தடுப்பணை நிரம்பியிருந்த நிலையில், மர்ம நபர்கள் ஓட்டை போட்டதால், தேங்கிருந்த நீர் வீணானது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், உத்தனப்பள்ளி அடுத்த நாகமங்கலம் ஏரியிலிருந்து, கருக்கனஹள்ளி ஏரிக்கு செல்லும் வகையில், கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இதன் குறுக்கே தொட்டமெட்டரை, பந்தாரப்பள்ளியில், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர, கால்நடைகளுக்கு பயன்படுத்த என மொத்தம், 4 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.தற்போது, நாகமங்கலம் ஏரி நிரம்பாத போதும், சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால், விவசாய நிலங்களில் இருந்து வந்த நீரால், கால்வாய் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தொட்டமெட்டரை முனியப்பன் கோவில் அருகே, 2023 - 24ம் ஆண்டில், 5.42 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த தடுப்பணையின் அடிப்பகுதியை, மர்ம நபர்கள் சேதப்படுத்தி, ஓட்டை போட்டுள்ளனர். அதனால் நேற்று, தடுப்பணையிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேறியது. இதனால், தடுப்பணை நீரை, மழை இல்லாத நேரங்களில் பயன்படுத்த முடியும் என எதிர்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். தடுப்பணை ஓட்டையை உடனடியாக அடைக்க, அதிகரிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை