புதிய உறுப்பினர் சேர்க்கையில் சுறுசுறுப்புடன் பணியாற்றணும்
நாமக்கல், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த, 'ஓரணியில் தமிழகம்' திட்டத்தின்படி, கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசுகையில், ''நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், தமிழகத்திலேயே அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க, கட்சி நிர்வாகிகளும், பூத் ஏஜன்டுகளும் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்,'' என்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, டவுன் பஞ்., செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.