உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு மருத்துவமனையில்ஆவின் பாலகம் வேண்டும்

அரசு மருத்துவமனையில்ஆவின் பாலகம் வேண்டும்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம், ஆவாரங்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினந்தோறும், 500க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, விசைத்தறி தொழிலாளர்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், பலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனையில் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.அவ்வாறு வரும் மக்கள், பால், பிஸ்கட், டீ, காபி உள்ளிட்டவை தேவை என்றால், அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே சென்று, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்து தான் வாங்கி செல்ல வேண்டும். இதனால் நோயாளிகளும், உடனிருப்பவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஆவின் பாலகம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை