உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

நாமகிரிப்பேட்டை, டிச. 13-மனித உரிமை தினத்தையொட்டி, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மனித உரிமை தினத்தை முன்னிட்டு, ஆதிசங்கர் சமூக நல அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மக்கள் உரிமை மையம் சார்பில், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வெள்ளக்கல்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மைய நிறுவன தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சரவணன், பேரூர் செயலாளர் மணிக்கண்ணன் ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். வயதான பெண்களுக்கு சேலை, பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி