உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடர் மழையால் நிரம்பிய கிணறுகள்:விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழையால் நிரம்பிய கிணறுகள்:விவசாயிகள் மகிழ்ச்சி

பள்ளிப்பாளையம்:தொடர்ந்து பெய்த மழையால், பெரும்பாலான கிணறுகள் நிரம்பின.பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள், கிணற்று நீரை பயன்படுத்தி சாகுபடி செய்வர். சில மாதங்களாக மழை இல்லாததால், கோடைகாலத்தில் கிணற்றில் தண்ணீர் மிகவும் குறைந்து, பல கிணறுகள் வறண்டு காணப்பட்டன. மீண்டும் மழை பெய்தால், கிணற்றில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால், மழை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர்.இந்நிலையில், சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், கிணறுகளில் நீர்மட்டம் மெல்ல, மெல்ல அதிகரித்து வந்தது. இதனால் தண்ணீர் மட்டம் வேகமாக அதிகரித்து தற்போது கிணறுகள் முழுமையாக நிரம்பி காணப்படுகிறது. வயல் பரப்பும், கிணறுகளின் நீர் பரப்பும் ஒரே மட்டமாக உள்ளது. அந்தளவுக்கு கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. கையிலேயே கிணற்றில் தண்ணீர் எடுக்கும் அளவுக்கு கிணற்றில் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ