உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் தேர்வுக்கு நேர்காணல்

மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் தேர்வுக்கு நேர்காணல்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு - பரமத்தி வேலுார் சாலையில் உள்ள, நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், மாணவரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளருக்கான நேர்காணல், கல்லுாரிகளில் மாணவர் மன்றம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். நேர்காணல் செய்வதை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.மாநில மாணவரணி இணை செயலாளர் மோகன், மாநில மாணவரணி துணை செயலாளர்கள் தமிழரசன், பொன்ராஜ், கோகுல், தமிழ் அமுதரசன், ஆனந்த் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். மாணவர் அணியில் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் என, 5 நிர்வாகிகளுக்கான தேர்வு நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி