உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குழாயை சரி செய்தபோது குளம்போல் தேங்கிய தண்ணீர்

குழாயை சரி செய்தபோது குளம்போல் தேங்கிய தண்ணீர்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் செல்லும் சாலையில், பிரதான குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வழியாக, குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. சில நாட்களுக்கு முன், இந்த பிரதான குடிநீர் குழாய் சேதமடைந்து விட்டது. சேதமடைந்த இந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில், நேற்று முன்தினம் இரவு பள்ளிப்பாளையம் நகராட்சி குடிநீர் பணியாளர்கள் ஈடுபட்டனர். பொக்லைன் மூலம் சாலையில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை சீரமைக்கும் போது, அதிகளவில் தண்ணீர் வீணாகி சென்றது. வீணாகி சென்ற தண்ணீர், அருகில் இருந்த பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் குளம் போல் தேங்கி நின்றது. கனமழை பெய்தால் எப்படி மழைநீர் தேங்கி நிற்குமோ அப்படி தண்ணீர் தேங்கி நின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ