மேலும் செய்திகள்
கான்கிரீட் சாலை பணி தொடக்கம்
14-Sep-2024
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து பகுதியில் குப்பை சேகரிக்க, தனியார் டிராக்டரை பயன்படுத்திய போது, அதில் அமர்ந்து சென்ற துாய்மை பணியாளர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரி-ழந்தார்.ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகு-தியில் குப்பை சேகரிக்க, 3 மேஸ்திரிகள், 80 துாய்மை பணியா-ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சேகரித்த குப்பையை எடுத்துச்-செல்ல, 2 டிராக்டர், ஒரு மினி லாரி என, 3 வாகனங்கள் உள்-ளன. மூன்று வாகனங்கள் இருக்கும் நிலையில், டவுன் பஞ்., நிர்-வாகம் தனியாரிடமிருந்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் டிராக்-டரை, தினசரி, 1,750 ரூபாய் வாடகைக்கு எடுத்து, சில நாட்க-ளாக பயன்படுத்தி வருகிறது.இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு, தனியாருக்கு சொந்-தமான டிராக்டரில், 5 துாய்மை பணியாளர்களுடன் குப்பை சேக-ரிக்கும் பணியில் டிரைவர் சுப்பிரமணி, 45, ஈடுபட்டிருந்தார். அப்-போது, ப.வேலுார் செக் போஸ்ட் அருகே சென்றபோது, டிராக்-டரில் அமர்ந்து சென்ற துாய்மை பணியாளரான சுப்பிரமணி, 48, தவறி கீழே விழுந்தார். சிறிது துாரம் இழுத்து செல்லப்பட்டதில், தலையில் பாலத்த காய-மடைந்தார். அவரை மீட்ட சக ஊழியர்கள், ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுப்பிரமணியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்-தனர்.அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார், டிரைவர் சுப்பிரமணியை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், ''குப்பை சேகரிக்க வாகனங்கள் பற்றாக்குறையால், தனியாரிடம் டிராக்டரை வாடகைக்கு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசார-ணையில் விபத்துக்கான காரணம் தெரியவரும்,'' என்றார்.இதுகுறித்து, டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கூறியதாவது:ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் குப்பை சேகரிக்கும் பணியில் டிரைவர்கள் மட்டுமின்றி, துாய்மை பணியாளர்களும் டிராக்டரை ஓட்டிச் செல்கின்றனர்.இதுகுறித்து பலமுறை டவுன் பஞ்., நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டி உள்ளோம். 'விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்தப்படும்' என, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, டிராக்டரை வாடகைக்கு விட்டது சட்டத்துக்கு புறம்பான செய-லாகும். இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
14-Sep-2024