உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா

கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 28; நுாற்பாலை தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா, 22. இவர்களுக்கு, கடந்த, 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், நேற்று முன்தினம் இரவும், கணவன், மனைவி இடையே சண்டை ஏற்-பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த நந்தகுமார், சுலோச்ச-னாவை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த சுலோச்சனா, பள்-ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு-கிறார். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்-துள்ளார்.இந்நிலையில், சிகிச்சையில் இருந்த சுலோச்சனா, புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று உறவினருடன் பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் கூறுகையில், 'சுலோச்சனா புகார் மீது வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை கைது செய்துள்ளோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை