உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா

ராசிபுரம் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா

ராசிபுரம், தமிழக வனத்துறை சார்பில், வன உயிரின வாரவிழா கொண்டாடப்படுவதையொட்டி, ராசிபுரம் சரக வனத்துறை சார்பில், வன உயிரின வாரவிழா, மல்லுார் காப்புக்காடு பகுதியில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் உத்தரவுப்படி, ராசிபுரம் வனச்சரக அலுவலர் சத்யா தலைமையில் விழா நடந்தது. ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, துாய இருதய மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்கள் மல்லுார் பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வனபாதுகாப்பு, வன உயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, மல்லுார் காப்புக்காடு பகுதியில் உள்ள கல்லாங்குளம் வனச்சரகம் முதல் மாமரத்து ஓடை சரகம் வரை, 2 கி.மீ., தொலைவு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களுக்கிடையே வனவிலங்கு வார விழிப்புணர்வு தொடர்பான வினாடி--வினா போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், வனத்துறையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை