உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மீட்கப்பட்ட புறம்போக்கு இடத்தில் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுமா?

மீட்கப்பட்ட புறம்போக்கு இடத்தில் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுமா?

பள்ளிப்பாளையம் : பெரியார் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ஓடை புறம்போக்கு நிலத்தில், விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பாளையம் பகுதியில் கடந்தாண்டு கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரியார் நகரில் ஆற்றோரத்தில் காலியான இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்த கலெக்டர், உடனடியாக அந்த இடத்தை சர்வே செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தை சர்வே செய்தபோது, ஓடை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, வருவாய்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் பாதுகாப்பு சுவரை அகற்றி, ஆக்கிரமிப்பில் இருந்த, 1.20 ஏக்கர் நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடம் கடந்த ஓராண்டாக பயன்பாடின்றி உள்ளது. அந்த காலி இடத்தில் விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ