உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரோந்து பணி போலீசார் கூடுதல் கவனம் செலுத்துவார்களா

ரோந்து பணி போலீசார் கூடுதல் கவனம் செலுத்துவார்களா

பள்ளிப்பாளையம், டிச. 20-நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை சுற்று வட்டாரத்தில், 100க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. நூற்பாலைகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர். இதனால் வெப்படை தொழிலாளர் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. பகல், இரவு என, எல்லாத நேரத்திலும் தொழிலாளர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால், இரவில் குற்ற செயல்கள் அதிகளவு நடக்கிறது. எனவே இரவில் போலீசார் ரோந்து பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, வெப்படை பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: இரவு நேரத்தில் வடமாநில தொழிலாளர்கள் நடமாட்டம் வெப்படை பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. பல நேரங்களில் போதையில் இவர்கள் மோதிக்கொள்கின்றனர். மூன்று நாட்களுக்கு முன் பாதரையில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கொலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் இரவு நேர ரோந்து பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் அசம்பாவிதங்களை தடுக்க முடியும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை