வாடகை கட்டடத்தில் நீதிமன்றம் சொந்த இடம் ஒதுக்கப்படுமா?
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டி பஞ்சாயத்து பகு-தியில், தனியார் கட்டடத்தில், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், தனித்தனியாக இயங்கி வருகின்றன. இந்த நீதி-மன்றங்களுக்கு கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளடங்கியுள்ளதால், குற்ற-வியல் வழக்குகளும், உரிமையியல் வழக்குகளும் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், இந்த நீதிமன்றங்கள் துவக்கப்பட்டதில் இருந்து சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.எனவே, புதிதாக நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என, அர-சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நீதி-மன்றம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யுமாறு, வருவாய்த்து-றையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், சேந்தமங்க-லத்தை சுற்றிலும் உள்ள, 2 கி.மீ., துாரத்தில் ஒருங்கிணைந்த நீதி-மன்ற வளாகம் கட்டும் அளவிற்கு பேதிய அரசு புறம்போக்கு இடம் இல்லை. எனவே, அரசு நிலத்தை வாங்கி, அதில் நிதி-மன்றம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.