உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா?

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா?

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேம்பாலத்தின் கீழே வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேம்பால பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழே உள்ள இடத்தில் இரண்டு பக்கங்களிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்-ளது. இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடமில்லை. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகள், பேக்-கரி, ஓட்டல், வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் சாலையில் தான் வாகனங்கள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்-வாறு சாலையில் வாகனங்கள் நிறுத்தினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். எனவே, மேம்பாலத்தின் கீழே உள்ள இடத்தை வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ