உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

சேந்தமங்கலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 36; பாக்கு பறிக்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், கொல்லிமலை அடிவாரம், காரவள்ளியில் ஒரு பாக்கு தோப்பில், பாக்கு பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பாக்கு மரத்தை சாய்த்தபோது, அருகில் இருந்த மின் கம்பி மீது பாக்கு மரம் மோதியது. இதில், ‍‍‍வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தார். அருகில் இருந்த தொழிலாளர்கள், வெங்கடேசனை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி