உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், கொல்லப்பட்டி திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி, 70; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மல்லசமுத்திரம், மாமரப்பட்டி பெட்ரோல் பங்கில் அவரது, 'எக்ஸல் சூப்பர்' மொபட்டிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு, வையப்பமலை சாலையை கடக்க முயன்றார்.அப்போது, மல்லசமுத்திரத்தில் இருந்து வையப்பமலை நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத டூவீலர் மோதிய விபத்தில், கிருஷ்ணமூர்த்தி படுகாயமடைந்தார்.அருகில் இருந்தவர்கள் மீட்டு, மல்லசமுத்திரம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்-டர்கள், கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவ-ரது மனைவி பொன்னாயா, 65, அளித்த புகார்படி, மல்லசமுத்-திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். அனை-வருக்கும் திருமணமாகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை