உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் உலக ரத்ததான தின முகாம்

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் உலக ரத்ததான தின முகாம்

நாமக்கல்: உலக ரத்ததான தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய முகாமை, ஆசிரியர் சதீஸ்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, சேலம் கே.எஸ்.எம்., ரத்த வங்கி மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ரத்த தானத்தின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார். மாணவர்களும் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். தாளாளர் முத்துசாமி, ரத்த வகைகள் மற்றும் ரத்த தானத்தின் விதிமுறைகள் பற்றி பேசினார். ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி முதல்வர் பழனிவேல், ஏ.கே.வி., மெட்ரிக் பள்ளி முதல்வர் இளமுருகள் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். மாணவர்களுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் ரத்ததானம் அளித்தனர். இறுதியாக பள்ளி மாணவி கனிஷ்கா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை