உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி

உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: நாமக்கல்லில், உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் அக்.,10ம் தேதி, உலக மனநல தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.மருத்துவக்கல்லுாரி, செவிலியர் கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்ற பேரணியானது அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி, மருத்துவக் கல்லுாரி வளாகம் சென்றடைந்தது. நிகழ்ச்சியில், ஆர்.எம்.ஓ., குணசேகரன், உள்தங்கும் மருத்துவர் லீலாதரன், மனநலப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் பாலசுப்பரமணியம், டாக்டர் சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை