உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில் உலக மருந்தாளுநர் தின பேரணி

எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில் உலக மருந்தாளுநர் தின பேரணி

எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில்உலக மருந்தாளுநர் தின பேரணிகுமாரபாளையம், அக். 1-குமாரபாளையம் எக்ஸல் மருந்தியல் கல்லுாரி சார்பில், உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன், துணைத்தலைவர் மதன்கார்த்திக் ஆகியோர் வழிகாட்டுதல்படி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் வீரமணி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பள்ளிப்பாளையம் அருகே, ஒட்டமெத்தை பஸ் ஸ்டாப்பில் தொடங்கிய பேரணி, புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் முடிந்தது. பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, எஸ்.ஐ., பிரபாகரன் ஆகியோர் பேரணியை வழி நடத்தினர். இதில், 500 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். பேரணியில், டெங்கு காய்ச்சல் பரவல், அவற்றை தடுக்கும் வழிமுறை குறித்து பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும், கோஷம் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரி முதல்வர் மணிவண்ணன், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை