மேலும் செய்திகள்
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
16-Oct-2024
ராசிபுரம், நவ. 6-நாமகிரிப்பேட்டை பகுதியில், ஆர்.சி.எம்.எஸ்.,சிற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடப்பது வழக்கம். அதுமட்டுமின்றி, 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகளிலும் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. தொடர் மழை காரணமாக, கடந்த வாரம் நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. 15 நாட்களுக்கு பின், நேற்று நாமகிரிப்பேட்டை, ஆர்.சி.எம்.எஸ்.,சில் மஞ்சள் ஏலம் நடந்தது.இதில், விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,342 ரூபாய், அதிகபட்சம், 15,319 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,002 ரூபாய், அதிகபட்சம், 13,022 ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 163, உருண்டை, 58 என, 221 மூட்டை மஞ்சள், 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
16-Oct-2024