மேலும் செய்திகள்
தென்னை வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த யோசனை
22-Apr-2025
எருமப்பட்டி:எருமப்பட்டி வட்டார வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், மாணிக்கவேலுார் கிராமத்தில் விவசாயிகளுக்கான மஞ்சள் ஒட்டும் பொறி குறித்த செயல்விளக்க முகாம் நடந்தது. வட்டார உதவி இயக்குனர் செல்வி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். தனியார் வேளாண் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள், விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறியால், பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் என, செயல் விளக்கம் அளித்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
22-Apr-2025