உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில், நேற்று முன்தினம் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அதில், யோகா பயிற்சியின் நன்மை, சிறப்புகளை சுரேந்தர் என்ற மாணவரும், ஹரிட்டா என்ற மாணவியும் எடுத்துரைத்தனர். அதை தொடர்ந்து, யோகா ஆசிரியை ராஜகுமாரி, பல்வேறு ஆசனங்-களை செய்து காட்டி, அதன் சிறப்புகளை விளக்கினார்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, பல்வேறு மன்ற செயல்பாடுகளின் துவக்க விழா நடந்தது. அதில் முதல் நிகழ்வாக தாளாளர் முத்து-சாமி, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து மன்ற செயல்-பாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் பழனிவேல், மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார். பின், ஒவ்வொரு மன்ற தலைவரும் அவர்களது மன்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியதோடு, அந்த மன்றம் தொடர்-பான சில செயல்பாடுகளை செய்து காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை