உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

நாமக்கல், 'அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் செய்யலாம்' என, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி., சுபாஷினி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிள், பணிபுரியும் அலுவலர்கள் பணிகளை செய்து கொடுக்க லஞ்சம் கேட்கக்கூடாது. இதை மீறி யாராவது லஞ்சம் கேட்டால், அது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகாரளிக்கலாம். மேலும், 9445048878, 9498190735, 9445048933, 04286-281331 ஆகிய, மொபைல் மற்றும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ