மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கிவாலிபர் பலிஎலச்சிபாளையம், அக். 16-எலச்சிபாளையம் அடுத்த குமரவேலிபாளையம், குமரன் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் நாராயணன், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, மணலி ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தறிபட்டறையில் பாவு நுால் சுற்றும் உருளையை வெளியே எடுத்துவந்தார்.அப்போது, உயரத்தில் இருந்த மின்சார ஒயரில் இரும்பு உருளைபட்டு மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, வேலகவுண்டம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.