உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊருக்குள் வரும் யானைகளால் அச்சம் : பொது மக்களின் மறியலால் பாதிப்பு

ஊருக்குள் வரும் யானைகளால் அச்சம் : பொது மக்களின் மறியலால் பாதிப்பு

கூடலூர் : மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை விரட்ட வலியுறுத்தி, மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூர் கோக்கால் பகுதிக்கு வந்த மூன்று யானைகளில் ஒன்று ராஜேஸ்வரி என்பவரை தாக்கியது. காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதேபோல நேற்று முன்தினம் அதிகாலை 2.00 மணிக்கு அப்பகுதிக்கு நுழைந்த யானைகள், தஸ்தகீர் (51) என்பவர் வீட்டைநாசம் செய்தது. வீட்டில் இருந்த தஸ்தகீர் மற்றும் மனைவி, நான்கு குழந்தைகள் முன் வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். யானைகளால் தொடர் பாதிப்புகளால் ஆத்திரமடைந்த மக்கள்,நேற்று காலை 11.30 மணிக்கு மேல்கூடலூரில் மழையிலும் மறியலில் ஈடுபட்டனர். இதனால், கூடலூர் - ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, 'பிரச்னை குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்ப்படும்,' என உறுதியளித்தனர். அதனை 11.45 மணிக்கு சாலை மறியலை கைவிட்டனர். அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்ட வனச் சரகர் முத்துசாமி, 'முதல் கட்டமாக வன ஊழியர்கள் சிறப்பு குழு அமைக்கப்பட்டு இப்பகுதிக்கு வரும் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை