உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறை சோதனைச் சாவடி அருகே சந்தன மரம் வெட்டி கடத்தல்

வனத்துறை சோதனைச் சாவடி அருகே சந்தன மரம் வெட்டி கடத்தல்

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள, மசினகுடி வனத்துறை சோதனைச் சாவடியிலிருந்த சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய மசினகுடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே 15 அடி தூரத்தில் சந்தன மரங்கள் இருந்தது. சாவடியில் பணியில் இருந்த வன ஊழியர் வெங்கடேஷ், நேற்று காலை 3.00 மணியளவில் அப்பகுதியில் மரம் இருப்பதை பார்த்தார். ஆனால், காலை 5.00 மணியளவில் அங்கிருந்த மரம் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டது. இதுதொடர்பாக வனச்சரகர் சுந்தரராஜன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வனப்பகுதிக்குள் இரவு 9.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், வனத்துறை சோதனை சாவடி மூடப்பட்டிருக்கும். ஆனாலும், வன ஊழியர்கள் பணியில் இருப்பர். பணியில் இருந்தபோதே சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை