உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 35 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்தோட்டக்கலைத்துறையினர் ஆய்வில் தகவல்

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 35 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்தோட்டக்கலைத்துறையினர் ஆய்வில் தகவல்

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 35 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்தோட்டக்கலைத்துறையினர் ஆய்வில் தகவல்அந்தியூர்:அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான, ராமகவுண்டன்கொட்டாய், எண்ணமங்கலம், செல்லம்பாளையம், நகலுார், வட்டக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்தும், விழுந்தும் சேதமடைந்தன. இதையறிந்த அந்தியூர் தோட்டக்கலைத்துறையினர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர் மல்லிகா கூறியதாவது: பச்சாம்பாளையம் வருவாய் கிராமத்தில் மூன்று விவசாயிகள் பயிரிட்டிருந்த, 885 வாழை மரங்கள்; கெட்டிசமுத்திரத்தில் மூன்று விவசாயிகளின், 1,450 மரங்கள்; நகலுாரில் எட்டு விவசாயிகளின், 7,350 மரங்களும் முறிந்து விழுந்தன. இதேபோல் எண்ணமங்கலம் வருவாய் கிராமத்தில், 18 விவசாயிகளின், 12,900 வாழை மரங்கள், அந்தியூர் 'அ' கிராமத்தில் ஏழு விவசாயிகளின், 5,550 மரங்களும், அந்தியூர் 'ஆ' கிராமத்தில், 10 விவசாயிகளின் 4,500 மரங்களும், சங்கராப்பாளையத்தில் பத்து விவசாயிகளின், ௨,௦௦௦ வாழை மரங்கள் என, 35 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை