உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கம்யூட்டர் மையம்

கம்யூட்டர் மையம்

ஊட்டி : ஊட்டி அருகே அணிக்கொரை கிராமத்தில் புதிய கம்யூட்டர் கல்வி மையத்தை உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் திறந்து வைத்தார். ஊட்டி அ.தி.மு.க., நகர செயலாளர் வக்கீல் தேவராஜ், ஊட்டி ஒன்றிய செயலாளர் குமார், தூனேரி பஞ்சாயத்து தலைவர் பீமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மையத்தின் மூலம் கிராம சுய உதவிக்குழுவினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்று திறனாளிகளுக்கு அரசு உதவியுடன் பாடம் போதிக்கப்படுகிறது. எஸ்.டி.ஆர்., கம்யூட்டர் மைய நிறுவனர் தேவகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ