மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
16 minutes ago
புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு பேரணி
18 minutes ago
குன்னுார்;குன்னுார் கேத்தி, கொல்லிமலை, ஊட்டி பாலாடா, ஏக்குணி உட்பட பல கிராமங்களிலும் ஊட்டி பூண்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் ஊட்டி பூண்டு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏலம் விடப்படுகிறது. கடந்த இரு நாட்களாக, அதிகபட்சமாக கிலோவிற்கு, 507 ரூபாய் வரை ஊட்டி பூண்டு ஏலம் போனது. கேத்தி பாலாடா விவசாயிகள் கூறுகையில், 'ஊட்டி பூண்டின் காரத்தன்மை அதிகம் என்பதால் மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக, மத்திய பிரதேசம் உட்பட வடமாநிலங்களில் இருந்து வர்த்தகர்கள் இங்கு வந்து ஊட்டி பூண்டு மொத்தமாக ஏலம் எடுத்து வாங்கி செல்கின்றனர். இவற்றை அங்கு விதைகளுக்காக பயன்படுத்துகின்றனர். குறைந்தபட்சம் கிலோவிற்கு, 100 முதல் 507 ரூபாய் வரை ஏலம் போனது' என்றனர்.
16 minutes ago
18 minutes ago