உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஐகோர்ட் உத்தரவை மீறும் போக்குவரத்து கழகம்; அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு

ஐகோர்ட் உத்தரவை மீறும் போக்குவரத்து கழகம்; அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு

குன்னுார்: நீலகிரியில் முறைகேடாக வசூலிக்கப்படும் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் தொடர்பாக, அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், 349 பஸ்கள் இயக்கப்படுகிறது.வட்டார போக்குவரத்து அலுவலக உத்தரவுக்கு எதிராக, இந்த பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' பெயரில் கூடுதல் கட்டணம் மோசடி தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில், 2019ல் வழக்கு தொடுக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது.இந்நிலையில், ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த குழுக்களின் காலாண்டு கூட்டத்தில், ஐகோர்ட் உத்தரவு செயல்படுத்திய விபரங்கள் ஆர்.டி.ஓ., விடம் கேட்கப்பட்டது.லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு நிர்வாகி ஆல்தொரை கூறுகையில்,''நீலகிரியில் அரசு பஸ்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்க அரசின் அனுமதி இல்லாத நிலையில் விதிமுறைகளுக்கு புறம்பாக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவிற்கு பிறகு பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஓ., பட்டியல் வழங்கினார். இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ