உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின் கம்பத்தின் மீது விழுந்த மரம் பணியாளருக்கு உதவிய இளைஞர்கள்

மின் கம்பத்தின் மீது விழுந்த மரம் பணியாளருக்கு உதவிய இளைஞர்கள்

பந்தலுார்;பந்தலுார் அருகே உப்பட்டி சாலையோரம், காய்ந்த நிலையில் இருந்த மரம் ஒன்று அடியோடு சாய்ந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது.அப்போது, மின்கம்பத்தின் மேல் பாகம் உடைந்ததுடன் மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், மின் பணியாளர்கள், மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தி மின் வினியோகத்தை சீரமைத்தனர்.படைச்சேரி பகுதியில் பிரமிளாதேவி என்பவரின் வீட்டு சுவர் முழுமையாக இடிந்து விழுந்தது. இதனால் அவர் தற்போது வீட்டில் குடியிருக்க முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, நிவாரண தொகை வழங்கினர். ஊராட்சி மூலம் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டுமென பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.மேலும், பிதர்காடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டின் பின்பக்க சுவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அங்கு குடி இருக்க முடியாத நிலையில் தற்போது வாடகை வீட்டில் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியை வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்ததுடன், தொகுப்பு வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை