உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஸ்கூட்டி மீது விழுந்த மரம்

ஸ்கூட்டி மீது விழுந்த மரம்

பந்தலுார்;பந்தலுார் அருகே ஸ்கூட்டி மீது மரம் விழுந்ததில், இளைஞர் உயிர் தப்பினார்.பந்தலுார் அருகே கொளப்பள்ளி கரகம்பாடி பகுதியை சேர்ந்தவர் உதயராஜ், 34. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார்.அப்போது, வீட்டின் அருகே காய்ந்த நிலையில் இருந்த மரம் ஒன்று ஸ்கூட்டியின் மீது விழுந்தது. அப்போது, அவர் தலையை திருப்பிக் கொண்டதால் மரம் காலில் விழுந்து முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து, கேரள மாநிலம் வயநாடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதார். போலீசார் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ