உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டக்கலை பசுமை குடிலில் 30 ஆயிரம் மலர் நாற்றுகள் : சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை

தோட்டக்கலை பசுமை குடிலில் 30 ஆயிரம் மலர் நாற்றுகள் : சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை

ஊட்டி:ஊட்டி தோட்டக்கலை பசுமை குடிலில், 30 ஆயிரம் மலர் நாற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை வளாகத்தில் உள்ள பசுமை குடிலில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, ரோஜா, குறிஞ்சி உள்ளிட்ட மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, 30 ஆயிரம் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் மலர் நாற்றுக்கள் தாவரவியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு நடவு செய்யப்படுகிறது. கோடை சீசன் மற்றும் பிற நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பூங்கா நிர்வாகம் கூறுகையில், 'பசுமை குடில் நர்சரியில், ரோஜா, குறிஞ்சி, பால்சம் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுகள், கள்ளிச்செடி வகைகள் என, 30 ஆயிரம் மலர் நாற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.மலர் வகை நாற்றுகள், 15 ரூபாய், கள்ளி செடி வகை நாற்றுக்கு, 25 ரூபாய் பிற வகை மலர் நாற்றுக்கு அந்தந்த வகைக்கு ஏற்றவாறு விலைக்கு விற்கப்படுகிறது,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ