உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் கூடுதலாக 20 டிரான்ஸ்பார்மர் குறைந்த மின் அழுத்த பிரச்சனைக்கு தீர்வு

கூடலுாரில் கூடுதலாக 20 டிரான்ஸ்பார்மர் குறைந்த மின் அழுத்த பிரச்சனைக்கு தீர்வு

கூடலுார்;கூடலுாரில் குறைந்த மின் அழுத்த பிரச்னைக்கு தீர்வாக புதிதாக, 20 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணியில் மின் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கூடலுார் பகுதியில் மின் துறை சார்பில் பல இடங்களில், டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் வினியோகம் வருகின்றனர். எனினும், சில இடங்களில், குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதுடன், அடிக்கடி மின் சப்ளை தடைபடுவதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணியில் மின் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'கூடலுாரில் தடையின்றி மின்சாரம் சப்ளை செய்து வருகிறோம். மழை காலங்களில் மரங்கள் விழுந்து சேதமடைந்த மின் கம்பம் மற்றும் மின் கம்பிகள் உடனடியாக சீரமைத்து மின் சப்ளை வழங்கி வருகிறோம். மேலும், குறைந்த மின்னழுத்தம் உள்ள, 20 இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி நிறைவு பெற்றபின், எங்கும் குறைந்த மின்னழுத்த பிரச்னை இருக்காது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை