மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
7 hour(s) ago
பந்தலூர்:பந்தலுாரில் உள்ள பழங்குடியின குடியிருப்புகளுக்கு தார்பாலின் வழங்கி உதவி செய்யப்பட்டது.பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில், குரும்பர் சமுதாய மக்கள் தவிர மற்ற இரண்டு சமுதாயத்தை சேர்ந்த மக்களும், பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்களுக்கான குடியிருப்புகள் அரசு மூலம் கட்டி தரப்பட்ட போதும், போதிய தரம் இல்லாமல் கட்டி தருவதால் மழை காலங்களில் மழை நீர் கசிந்து பாதிப்புகள் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் பெரும்பாலான குடியிருப்புகள் குடிசை வீடுகளாகவே உள்ளதால், மழை காலங்களில் குடியிருக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இத்தகைய வீடுகளில் மழை காலங்களில் மழை நீர் கசியாமல், பாதுகாக்கும் வகையில், நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், 60 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, தலா, 5000 ரூபாய் மதிப்பிலான தார்பாலின்கள் வழங்கப்பட்டது. இதனால், நடப்பு ஆண்டு மழை காலத்தில் மழை நீர் கசியாமல் இருக்கும்.இதற்கான நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மெர்சி, ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், சசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழை காலம் முடியும் வரை, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இது போன்ற உதவிகள் செய்யப்பட உள்ளது.
7 hour(s) ago