உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண்வள அட்டையின் படி காய்கறிக்கு சமச்சீர் உரங்கள்; விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

மண்வள அட்டையின் படி காய்கறிக்கு சமச்சீர் உரங்கள்; விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

ஊட்டி : 'விவசாயிகள் மண்வள அட்டையின் அடிப்படையில் மலை காய்கறிக்கு தேவையான சமச்சீர் உரங்களை பயன்படுத்த வேண்டும்,' என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. நீலகிரியில் காணப்படும் மண் வகைகளில் தழை சத்து குறைபாடு உள்ளது. மணி மற்றும் சாம்பல் சத்து அதிகளவில் உள்ளது. தழை சத்து பற்றாக்குறை முதன் முதலில் மண்ணில் தோன்றுகிறது. காய்கறி; பயிர்கள் தழை சத்து உரத்தை மற்ற சத்துக்களை விட அதிக அளவில் எடுத்துக்கொள்கிறது. விவசாயிகள் சரியான வழிமுறைகளை கையாள வேளாண் துறை அறிவுறுத்தி வருகிறது.

உரங்களின் அளவு எவ்வளவு?

மலை காய்கறிகளில், உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பொருத்து, தேவையான உரங்களை விவசாயிகள் கலப்புரங்களாக பயன்படுத்துவதால், அவற்றை விவசாயிகள் தாங்களாகவே கலந்து பயன்படுத்தலாம்.* மலை காய்கறி உற்பத்திக்கான கலப்புரம்- 4 என்ற எண்ணில், டன் ஒன்றுக்கு, 'யூரியா-, 130 கிலோ; பொட்டாஷ் ,100 கிலோ; சூப்பர் பாஸ்பேட்,750 கிலோ; டோலமைட் ,100 கிலோ;வேப்பம் புண்ணாக்கு, 20 கிலோ,' என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.*கலப்புரம்-5 ல், டன் ஒன்றுக்கு, 'யூரியா-150 கிலோ; டி.ஏ.பி., 75 கிலோ; பொட்டாஷ் - 150 கிலோ; சூப்பர் பாஸ்பேட் -350 கிலோ; டாலமைட்-225 கிலோ; வேப்பம் புண்ணாக்கு,-50 கிலோ,' என்ற விகிதத்தில் இருக்க வண்டும்.*கலப்புரம்- 12ல், டன் ஒன்றுக்கு, 'அமோனியம் சல்பேட்-800 கிலோ; பொட்டாஷ்-200 கிலோ,' என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம். * கலப்புரம்-18ல், டன்ஒன்றுக்கு, 'யூரியா -37 கிலோ; பொட்டாஷ், -29 கிலோ; சூப்பர் பாஸ்பேட், 107 கிலோ,' என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுதா கூறுகையில், ''விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மண்வள அட்டையின் அடிப்படையில், மலை காய்கறிகளின் வகைகள்; பரப்பின் அளவை பொருத்து, சமச்சீர் உரங்களை தேவையான அளவில் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை