உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் பஸ் ஸ்டாண்ட் வந்த கரடி: பயணிகள் அச்சம் பயணிகள் அச்சம்

குன்னுார் பஸ் ஸ்டாண்ட் வந்த கரடி: பயணிகள் அச்சம் பயணிகள் அச்சம்

குன்னுார்;குன்னுார் பஸ் ஸ்டாண்ட் வந்த கரடி குப்பைத் தொட்டியை உதைத்து பஜ்ஜி போண்டா கழிவுகளை உட்கொண்டு சென்றது.குன்னுார் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவைத் தேடி வந்து செல்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை குன்னுார் பஸ் ஸ்டாண்ட் வந்த கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியை உதைத்து கீழே தள்ளி அதில் இருந்த பஜ்ஜி போண்டா கழிவுகளை உட்கொண்டு சென்றது.பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நீண்ட நேரமாக இருந்த அந்த கரடியை இரவு நேரத்தில் வந்த பயணிகள் அச்சத்துடன் 'வீடியோ' எடுத்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எண்ணெய் பலகார கழிவுகளை குப்பை தொட்டிகளில் கொட்டி அங்கே வைத்து செல்வதால் கரடிகள் எண்ணெய் வாசனையால் வந்து செல்கிறது. நேற்று அதே கரடி தீயணைப்பு துறை அலுவலக வளாகத்தில் வலம் வந்துள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் குப்பைகளை வெளிய வைப்பதையும் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மக்கள் நடந்து செல்ல வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ