உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் பகலிலேயே கரடிகள் விசிட்: மக்கள் நடமாட அச்சம்

குன்னுாரில் பகலிலேயே கரடிகள் விசிட்: மக்கள் நடமாட அச்சம்

குன்னுார்;குன்னுார் கரோலினா பகுதியில் பகல் நேரங்களில் உலா வரும் கரடியால் மக்கள் வெளியே தனியாக செல்ல அச்சப்படுகின்றனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவை தேடி இரவில் மட்டுமே வந்த கரடிகள் தற்போது பகல் நேரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது அதிகரித்துள்ளது.இந்நிலையில், நேற்று காலை, 10:30 மணியளவில் கரோலினா பகுதியில் பூட்டியிருந்த வீட்டிற்குள் கரடி ஒன்று நுழைய முயன்றது.அப்போது, விநாயகர் கோவில் பகுதியில் இருந்த மக்கள் சப்தம் எழுப்பியதால் வீட்டின் வளாகத்தில் இருந்து குதித்து கரடி வெளியே வந்தது.பிறகு மக்கள் தொடர்ந்து சப்தம் எழுப்பியதால், சாலை வழியாக நடந்து சென்று கரிமொரா ஹட்டி வனப்பகுதிக்குள் சென்றது. பகல் நேரங்களிலேயே கரடிகள் இந்த பகுதிகளில் உலா வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தனியாக நடந்த செல்ல முடியாமல் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.மக்கள் கூறுகையில், 'பாதிப்புகள் ஏற்படும் முன்பு வனத்துறையினர் இந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை