| ADDED : ஜூலை 27, 2024 01:14 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சுகாதாரத் துறை சார்பில், வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை வகித்து பேசினார்.சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ், வார்டு உறுப்பினர் மகேஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, இசிஜி, ஸ்கேன், ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டதுடன், மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து உரிய ஆலோசனை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். அலோபதி மட்டுமின்றி சித்தா மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் கவுரிசங்கர் நன்றி கூறினார்.