மேலும் செய்திகள்
தேயிலை வரத்து அதிகரிப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி
25-Aug-2024
கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டமான காலநிலை தொடர்வதால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் பரவும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழில் தேயிலை. மாவட்டத்தின் பொருளாதாரம் இத்தொழிலை நம்பி உள்ளது. ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு தற்போது, 24 ரூபாய் வரை, விலை கிடைக்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக, தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மேக மூட்டமான காலநிலை தொடர்கிறது. இதனால், பசுந்தேயிலை மகசூல் குறைவதுடன், தோட்டங்களில் கொப்புள நோய் பரவும் அபாயம் உள்ளது.விவசாயிகள் கூறுகையில்,' மாவட்டத்தில், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் பகுதியில் சில நாட்களாக மேகமூட்டம் நிலவுகிறது. இதனால், கொப்புள நோய் பரவும் அபாயம் உள்ளதால், தேயிலை வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
25-Aug-2024